திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 1 டிசம்பர் 2022 (22:37 IST)

நவம்பர் மாதம் மெட்ரோவில் 62 லட்சம் பேர் பயணம்- மெட்ரோ நிர்வாகம்

சென்னையில் மெட்ரோ பயண  சேவை மக்களிடையே பிரபலம் அடைந்து வரும்  நிலையில், கடந்த  நவம்பர் மாதத்தில் மட்டும் 62 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது முதல் மக்கள் அதில் பயணித்து வருகின்றனர். நாள் தோறும் அதில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த  நிலையில், கடந்த ஜனவரியில், 25 லட்சம் பேரும், பிப்ரவரியில், 31 லட்சம் பேரும், மார்ச்சில் 44 லட்சம் பேரும், ஆகஸ்டி 56 லட்சம் பேரும், செப்டம்பரில் 61 லட்சம் பேரும், அக்டோபரில்,61 லட்சத்து 56,360 பேரும், நவம்பர் மாதம் 62,71,730 பெரும் பயணித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.

இதில், கியூ ஆர் கோடு முறையில், 18,22,703 பேர் பயணித்துள்ளதாகவும், டிராவல் கார்டு மூலம் 40,23, 296 பேரும் பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Edited by Sinoj