வியாழன், 24 நவம்பர் 2022
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated: வியாழன், 24 நவம்பர் 2022 (13:20 IST)

பெங்களூர்-ஓசூர் இடையே மெட்ரோ ரயில்.. தமிழக அரசுக்கு கடிதம்!

metro
பெங்களூரில் இருந்து ஓசூர் வரை மெட்ரோ ரயில் அமைக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதுகுறித்து கர்நாடக மாநில அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
பெங்களூர் முதல் ஓசூர் வரை மெட்ரோ ரயில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த திட்டம் சமீபத்தில் அமைக்கப்பட்டது 
 
இந்த நிலையில் பெங்களூர் ஓசூர் இடையே மெட்ரோ ரயில் அமைப்பது தொடர்பாக கர்நாடக மாநில அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில் பெங்களூர் ஓசூர் இடையிலான மெட்ரோ ரயிலுக்கு தேவையான இடம் ஒதுக்குவது உள்பட பல்வேறு முக்கிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது
 
பெங்களூர் மற்றும் ஓசூர் இடையிலான மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva