வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 27 டிசம்பர் 2017 (16:10 IST)

பெரிய பாண்டியை நம்ப வைத்து கழுத்தறுத்த நாதுராம் கூட்டாளி - நடந்தது இதுதான்

தமிழக காவல் அதிகாரி பெரிய பாண்டியனை, நாதுராமின் கூட்டாளி ஒருவர் நம்ப வைத்து கழுத்தறுத்தது தெரியவந்துள்ளது.

 
சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை காவல்துறை ஆணையாளர் பெரியபாண்டி சுட்டு கொல்லப்பட்டப்பட்டார். அவருடன் சென்ற முனிசேகர் காயமைடந்தார். தினேஷ் சவுத்ரி, நாதுராம் ஆகிய கொள்ளையர்களும்  பெரிய பாண்டியை சுட்டுக் கொன்று விட்டு தப்பி விட்டதாக முதலில் செய்திகள் வெளியானது.  
 
ஆனால், பெரிய பாண்டியனுடன் சென்ற மற்றொரு காவல் அதிகாரியான முனிசேகர் துப்பாக்கியிலிருந்த குண்டுதான், பெரிய பாண்டியனின் உடலில் பாய்ந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக ராஜஸ்தான் போலீசார் கூறினர். எனவே, இதுபற்றி தமிழக போலீசார் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.  
 
அந்நிலையில், கொள்ளையர்களை பிடிக்க சென்ற போது, முனிசேகர் தவறுதலாக சுட்டதாலேயே பெரிய பாண்டியன் மரணமடைந்துள்ளார் என்பதை தமிழக போலீசார் தற்போது உறுதி செய்ததாக நேற்று செய்திகள் வெளியானது. இப்படி வெளியான செய்தியில் உண்மையில்லை என காவல் ஆணையர் விஸ்வநாதன் நேற்று இரவு மறுத்தார். 

இந்நிலையில், உண்மையிலேயே ராஜஸ்தானில் என்ன நடந்தது என்பது தற்போது தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் பாலி மாவட்டத்தில் வசிக்கும் நாதுராமின் கூட்டளி ஒருவனிடம் தமிழக காவல் அதிகாரி பெரியபாண்டி நட்புடன் பழகி வந்தார். அவனை வைத்து நாதுராமை பிடிப்பதே தனிப்படை போலீசாரின் நோக்கமாக இருந்தது. தொடக்கத்தில் தயங்கிய அந்த நபர் பழக, பழக நாதுராமை பற்றிய சில தகவல்களை அவர் கூறியுள்ளார். அதன்பின், ஒரிரு நாட்கள் கழித்து நாதுராம் எங்கிருக்கிறான் எனக் கூறுகிறேன் எனக் கூறிவிட்டு சென்ற அந்த நபர் நாதுராமிடம் இதுபற்றி கூறியுள்ளான்.
 
எனவே, தன் நண்பர்களிடம் ஆலோசனை செய்த நாதுராம், ராம்பூர்வாஸ் எனும் பகுதியில் உள்ள ஒரு பழைய கட்டிடத்திற்கு தமிழக போலீசாரை அழைத்து வரும்படி கூறியுள்ளான். வந்திருப்பவன் நாதுராமின் கூட்டாளி என்பதை அறியாத தமிழக போலீசார் கடந்த 13ம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர். 
 
மேலும், நாதுராம் மற்றும் அவனின் கூட்டாளிகளிடம் துப்பாக்கி, வெடிகுண்டு போன்ற எந்த ஆயுதமும் அப்போது இல்லை என அந்த நபர் தனிப்படையிடம் கூறியிருந்தான். அதை நம்பி, அன்றே அவனை பிடித்து சென்னைக்கு அழைத்து வந்து விட வேண்டும் என தனிப்படை போலீசார் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், கட்டிடத்திற்குள் நுழைந்தவுடன்,  நாதுராமிம் கும்பல் அவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கி மற்றும் வெடுகுண்டுகளை வீசி தாக்கத் தொடங்கினர். இதில் சுதாரித்த தனிப்படையினர் அங்கிருந்து தப்பி வெளியே ஓடி வந்துள்ளனர். 
 
முனிசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் பெரிய கதவு வழியாக வெளியேறிய நிலையில், பெரிய பாண்டி சிறியதாக இருந்த ஒரு கதவு வழியாக தப்பிக்க முயன்றுள்ளார். ஆனல், கொள்ளைகும்பல் அதற்குள் அவரை சுற்றி வளைத்தது. அப்போதுதான், பெரியபாண்டியனை காப்பாற்றும் நோக்கத்தில் முனிசேகர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆனால், தவறுதலாக பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்து அவர் மரணமடைந்துள்ளார். 
 
ஆனால், முனிசேகரின் துப்பாக்கியை பறித்து பெரிய பாண்டியனை நாதுராம் சுட்டதாக தனிப்படை போலீசார் கூறிவிட்டனர். ஆனால், ராஜஸ்தான் போலீசாரின் விசாரணையில் அங்கு நடந்த சம்பவம் வெளியே வந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.