1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. andhra ex minister roja talk about mk stalin

சந்திரபாபு நாயுடு பண்ணாததை ஸ்டாலின் செய்கிறார்!.. பாராட்டி ட்ரோலில் சிக்கிய ரோஜா...

roja mk stalin
2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர்க்கு ஒவ்வொரு மாதமும் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என சொன்னார்கள்.
ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்கள் அந்த அந்த பணம் கொடுக்கப்படவில்லை.. இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் கேள்வி எழுப்பிய பின்னர்தான் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க திமுக அரசு முன்வந்தது.. ஆனால் அதையே பெருமையாக தற்போது திமுக அரசு தம்மட்டமடித்துக் கொள்கிறது..

அதோடு தேர்தல் வருவதால் மகளிர் உரிமை சட்டத்தை முடக்கி விடுவார்கள் என சொல்லி பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் 3 மாதத்திற்கான தொகை சேர்த்து 3 ஆயிரம் மற்றும் கோடை சிறப்பு தொகை என சொல்லி 2 ஆயிரம் சேர்த்து மொத்தம் 5 ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை பெறும் பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. தற்போது 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்..

இந்நிலையில் சென்னை துறைமுகம் பகுதியில் திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் நடிகையும், ஆந்திர முன்னால் அமைச்சருமான ரோஜா கலந்து கொண்டு பேசியபோது ‘ஆந்திராவில் சந்திரபாபு நாடு மாதம் 1500 தருவதாக சொல்லி இரண்டு வருடம் ஆகிவிட்டது.. ஆனால் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை.. ஆனால் தமிழ்நாட்டில் உங்கள் முதலமைச்சர் சொன்னபடியே மாதா மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்.. தலைவர் என்றால் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்’ என பேசினார்.

இதையடுத்து ‘தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்களுக்கு பின்புதான் முக ஸ்டாலின் பணம் கொடுத்தார்.. உங்களுக்கு வேணும்னா நீங்களும் இரண்டரை வருடம் காத்திருக்க வேண்டும்’ என நெட்டிசன்கள் ரோஜாவை ட்ரோல் செய்து வருகிறார்கள்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா போரால் குறைந்த முட்டை விலை!...