வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (08:35 IST)

பெரியபாண்டியனை துளைத்தது சக ஆய்வாளரின் துப்பாக்கி குண்டா? அதிர்ச்சி தகவல்

சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்க சென்ற இடத்தில் ராஜஸ்தான் கொள்ளையர்களால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்த ஆய்வாளர் பெரியபாண்டியன் கொலை குறித்து ராஜஸ்தான் போலீசார் விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்

இந்த நிலையில் ராஜஸ்தானின் பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்க்கவ் கூறியபோது, 'பெரியபாண்டியனின் உடலில் உள்ள குண்டு, சக ஆய்வாளர் முனிசேகர் வைத்திருந்த துப்பாக்கியில் இருந்து வெளிவந்த குண்டு என்று அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

முனிசேகரின் துப்பாக்கியை எடுத்து கொள்ளையர்கள் சுட்டிருந்தால் பெரியபாண்டியனை மட்டும் அவர்கள் சுட்டிருக்க வாய்ப்பில்லை. அனைவரையும் தான் சுட்டிருப்பார்கள். பெரியபாண்டியன் மட்டும் சுடப்பட்டுள்ளதால் சக ஆய்வாளர் முனிசேகர் மீதும் சந்தேகம் எழுந்துள்ளதாக ராஜஸ்தான் காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பது முழுமையான விசாரணையில் தான் தெரியவரும்

இந்த நிலையில் இதுகுறித்து ஆய்வாளர் முனிசேகர் கூறியபோது, 'நானும், பெரியபாண்டியனும் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற இடத்தில் அவர்கள் கட்டையால் எங்களைத் தாக்கினார்கள். அப்போது, நான் நிலைதடுமாறி கீழே விழுந்தேன். அப்போது கையிலிருந்த என்னுடைய துப்பாக்கி கீழே விழுந்தது. அதனை பெரியபாண்டியன் தான் எடுத்தார். அப்போது, எங்களுடன் வந்த சக காவலர்கள் உதவியுடன் நாங்கள் வெளியே வந்தோம். எதிர்பாராதவிதமாக பெரியபாண்டியன் கொள்ளையர்களிடம் மாட்டிக்கொண்டார்' என்று கூறியுள்ளார்.