பெரியபாண்டியனை முனிசேகர் சுடவில்லை: பல்டி அடிக்கும் காவல்துறை
சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க சென்ற தனிப்படையில் இடம்பெற்றிருந்த பெரியபாண்டியன் என்ற ஆய்வாளர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் சுட்டு கொல்லப்பட்டார்.
பெரியபாண்டியன் முதலில் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக செய்திகள் பரவிய நிலையில், பெரியபாண்டியனை சுட்டது 'சக ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியால்தான் என்று ராஜஸ்தானின் பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்க்கவ்’ உறுதியாக தெரிவித்தார்
இந்த நிலையில் நேற்று ராஜஸ்தான் போலீஸ் கூறியது உண்மைதான் என்றும், கொள்ளையர்களை பிடிக்கும்போது முனிசேகர் தவறுதலாக பெரியபாண்டியனை சுட்டுவிட்டதாக காவல்துறையினர் கூறியதாக ஒரு செய்தி பரவி கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் வந்தது
ஆனால் இந்த செய்தி வெளிவந்த ஒருசில மணி நேரங்களில், இந்த தகவலை தமிழக காவல்துறை வெள்யிடவில்லை என்றும், பெரியபாண்டியன் சுடப்பட்ட சம்பவம் குறித்து ராஜஸ்தான் காவல்துறையின் விசாரணை நடத்தி வருவதாகவும், முழு விசாரணை முடிந்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை வட்டாரம் தற்போது திடீர் பல்டி அடித்துள்ளது.