திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (09:03 IST)

பெரியபாண்டியன் கொலை வழக்கில் சக ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு: ராஜஸ்தான் போலீஸ் அதிரடி

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பெரியபாண்டியன் வழக்கை தீவிரமாக ராஜஸ்தான் போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் பாலி மாவட்ட காவல்துறை அதிகாரி பார்கவி, 'பெரியபாண்டியனின் உடலை துளைத்தது சக ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த குண்டு' என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி, 'பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்த்ரன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகரின் அஜாக்கிரதையாக இருந்ததன் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் ராஜஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற மற்ற 3 காவலர்களும் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாகவும், பெரியபாண்டியனை காப்பாற்ற முயன்றபோது தவறுதலாக முனிசேகர் சுட்டதாக பாலி மாவட்ட எஸ்.பி. கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பெரியபாண்டியன் கொலை வழக்கில் சக ஆய்வாளர் மீதே வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.