1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 26 டிசம்பர் 2017 (17:56 IST)

பெரிய பாண்டியனை சுட்டது முனிசேகர்தான் - உறுதிப்படுத்திய தமிழக காவல்துறை

சென்னை கொளத்தூரை சேர்ந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனை, அவருடன் சென்ற முனிசேகர் தவறுதலாக சுட்டது உறுதியாகியுள்ளது. 

 
சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை காவல்துறை ஆணையாளர் பெரியபாண்டி சுட்டு கொல்லப்பட்டப்பட்டார். அவருடன் சென்ற முனிசேகர் காயமைடந்தார். தினேஷ் சவுத்ரி, நாதுராம் ஆகிய கொள்ளையர்களும்  பெரிய பாண்டியை சுட்டுக் கொன்று விட்டு தப்பி விட்டதாக முதலில் செய்திகள் வெளியானது. 
 
ஆனால், பெரிய பாண்டியனுடன் சென்ற மற்றொரு காவல் அதிகாரியான முனிசேகர் துப்பாக்கியிலிருந்த குண்டுதான், பெரிய பாண்டியனின் உடலில் பாய்ந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக ராஜஸ்தான் போலீசார் கூறினர். எனவே, இதுபற்றி தமிழக போலீசார் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். 
 
இந்நிலையில், கொள்ளையர்களை பிடிக்க சென்ற போது, முனிசேகர் தவறுதலாக சுட்டதாலேயே பெரிய பாண்டியன் மரணமடைந்துள்ளார் என்பதை தமிழக போலீசார் தற்போது உறுதி செய்துள்ளனர். அதாவது, கொள்ளையர்களிடமிருந்து பெரிய பாண்டியனை காப்பற்றவே முனிசேகர் சுட்டுள்ளார். அதில், தவறுதலாக குண்டு பெரிய பாண்டியன் மீது பட்டு அவர் மரணமடைந்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.
 
முனிசேகரிடம் ராஜஸ்தான் போலீசார் விசாரணையை முடித்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.