லண்டனில் முதல்வர் விஜயின் நிகழ்ச்சி ரத்து!.. என்ன காரணம்?..
தமிழக முதல்வர் விஜய் கடந்த 10ம் தேதி இரவு ஒரு வார பயணமாக லண்டன் புறப்படு சென்றார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் லண்டன் செல்வதாக அரசு தரப்பில் சொல்லப்பட்டது. அங்கு சென்றதும் நடிகர் அஜித்குமாரின் டீம் கலந்து கொண்ட கார் ரேஸ் போட்டியை கொடியசைத்து விஜய் துவங்கி வைத்தார்.
அதன்பின் சில நிறுவன அதிபர்களை சந்தித்து பேசினார். அதில், 15,300 கோடி முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வரவிருப்பதாக தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .ஒருபக்கம், விஜய் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலில் அவரை எப்படியாவது பார்த்துவிட வேண்டும், முடிந்தால் ஒரு புகைப்படமாவது எடுத்துக்கொள்ள வேண்டுமென லண்டன் வாழ் தமிழர்களும், ரசிகர்களும் ஆசைப்படுகிறார்கள். எனவே, நட்சத்திர ஹோட்டலின் முன்பு அவர்கள் காத்து கிடக்கிறார்கள்.
எனவே, லண்டன் தமிழர்களை விஜய் சந்திப்பதற்காக ஒரு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அந்த நிகழ்ச்சி தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக பொதுமக்களை விஜய் சந்திக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. காவல்துறையின் அனுமதி கிடைக்காததால் நிகழ்ச்சி கைவிடப்பட்டதாக கூறப்படும் நிலையில், தனது முதலீட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் இன்று இந்தியா திரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.