1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. weatherman says about rain

21 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கிறிஸ்துமஸ் தினத்தில் மழை: தமிழ்நாடு வெதர்மேன்

weatherman
சென்னையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்மஸ் தினத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்
 
 வரும் டிசம்பர் 25ஆம் தேதி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூலில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 20 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்துமஸ் தினத்தில் மழை பெய்தது என்றும், அதனை அடுத்து தற்போது தான் மழை பெய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
2001ஆம் ஆண்டில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தில் மழை பெய்தது என்றும் 20 ஆண்டுகள் கழித்து தற்போது தான் கிறிஸ்துமஸ் தினத்தில் மழை பெய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஓபிஎஸ் முன்னேற்றக் கழகம்” என்ற தனிக்கட்சி தொடங்கட்டும்: ஜெயக்குமார் யோசனை!