திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2022 (09:15 IST)

இயேசு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கானவர் அல்ல! – ஆளுனர் ஆர்.என்.ரவி பேச்சு!

ஆளுனர் மாளிகையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய ஆளுனர் ஆர்.என்.ரவி இயேசு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கானவர் இல்லை என பேசியுள்ளார்.

உலகம் முழுவதும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட உள்ளது. இயேசு பூமியில் பிறந்தநாள் கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸாக கொண்டாடப்படுகிறது. மதரீதியான பார்வையை தாண்டி கிறிஸ்துமஸ் உலகம் முழுவதும் பல நாடுகளில் குளிர்கால கொண்டாட்டமாகவும் உள்ளது.

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நேற்று சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்டு பேசிய ஆளுனர் ஆர்.என்.ரவி “இயேசு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கானவர் அல்ல. மாறாக அவர் ஒட்டுமொத்த மக்களுக்காக, மனித நேயத்திற்காக உழைத்தார். மனித குலத்தை காக்க, மற்றவர்களுக்காக தன்னுயிர் தந்து நீத்தார்” என்று கூறியுள்ளார்.

Edit By Prasanth.K