இன்று முதல் மிதமான மழை.. 25ஆம் தேதி கனமழை: வானிலை அறிவிப்பு!
இன்று முதல் தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என்றும் வரும் 25-ஆம் தேதி கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் தமிழகம் மற்றும் இலங்கையில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் வரும் 25-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக மாறும், என்றும் அதன் பிறகு அது புயலாக மாறுமா? என்பதை தீவிரமாக கண்காணித்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Edited by Mahendran