1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. watermelon star dhivakar compaint agasint pugazh

கானா வினோத்தும், புகழும் என்ன அடிச்சாங்க!.. மா.கா.ப ஆனந்த் போதையில் இருந்தார்.. வாட்டர் மிலன் திவாகர் புகார்!...

watermelon
வாட்டர் மெலன் ஸ்டார் என தனக்குத்தானே பட்டம் கொடுத்து கொண்டவர் திவாகர். இவர் ஒரு பிசியோதெரபி மருத்துவர். இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவற்றில் நிறைய வீடியோக்களை போட்டு பிரபலமானார்.. சிவாஜி போல் நடித்துக் காட்டுகிறேன் என சொல்லி நடித்து காட்டி ட்ரோலில் சிக்கினார். இவர் மீதான ட்ரோலே இவருக்கு விளம்பரமாக மாறிப்போனது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் ‘நேற்று நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.. அப்போது கானா வினோத்தும், புகழும் வேண்டுமென்றே என்னிடம் வம்பிழுத்து என்னை தாக்கினர். அவர்களை தடுக்கவேண்டிய மா.கா.பா ஆனந்த் செம போதையில் இருந்தார்.. அவரும் அவர்களோடு சேர்ந்துகொண்டு ஒரு இரும்பு ராடால் என் காலில் தாக்கினார். இதனால் எனக்கு ரத்தக்கட்டு ஏற்பட்டது.. எனவே காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறேன். போலீசார் அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பார்கள்..

கானா வினோத்துக்கு, புகழுக்கும் நான் பிக் பாஸ் சென்றது பிடிக்கவில்லை. அந்த பொறாமையில்தான் இப்படி நடந்துகொண்டார்கள். கானா வினோத் என் குடும்பத்தை பற்றி இழிவாக பேசினார்.. இதை நான் தட்டி கேட்டபோது அவர் என்னை தாக்கினார்.. புகழும் போதையில் இருந்தார்.. மா.கா.பா ஆனந்த் எப்போதுமே போதையில்தான் இருக்கிறார்..

என் வளர்ச்சியின் மீதுள்ள பொறாமையில்தான் இப்படி நடந்துகொள்கிறார்கள். இவர்களால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எனக்கு கிடைத்த வாய்ப்பு பறிபோய்விட்டது. என் வளர்ச்சியை இவர்களால் தடுக்க முடியாது. கண்டிப்பாக பெரிய அளவுக்கு வருவேன்.. திரைப்படங்கலில் ஹீரோவாக நடிப்பேன்’ என்று பேசியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
பெண்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு அவசியம்.. டெல்லி முதல்வர் ரேகா குப்தா கூறிய காரணங்கள்..!