ஞாயிறு, 8 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 பிப்ரவரி 2026 (12:53 IST)

விஜயகாந்துக்கு அப்புறம் நான்தான்!.. வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி!...

watermelon
Instagram போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தவர் திவாகர்.. கஜினி படத்தில் சூர்யா தர்பூசணியை சாப்பிட்டுக்கொண்டு தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளை பார்த்து ஒரு ரியாக்‌ஷன் கொடுப்பார். அதேபோல செய்து காட்டி தனக்கு வாட்டர் மெலன் ஸ்டார் என்ற பட்டத்தை திவாகரை வைத்துக் கொண்டார். அதோட சிவாஜி போல நடித்துக்காட்டுகிறேன் என சொல்லி கர்ணன் படத்திலிருந்து கிளைமேக்ஸ் காட்சியில் அவர் காட்டிய முக பாவனைகளை நடித்தும் காட்டுவார்.

மேலும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால் சில நாட்களில் வெளியேற்றப்பட்டார். இவரை பலரும் கேலியும், கிண்டலும் செய்தாலும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் பாசிட்டிவாக பேசி வருபவர் திவாகர். நான் மிகப்பெரிய நடிகன்.. என்னால் எதுவும் செய்ய முடியும் என்றெல்லாம் பேசி வருகிறார்...

நேற்று செய்தியாளர்களிடம் பெசிய திவாகர் ‘நடிப்பை பொறுத்தவரை சிவாஜி சாருக்கு அடுத்தது கமல் சார்தான்.. அவருக்கு அப்புறம் நான்தான்.. விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு இருப்பது போலவே எனக்கும் நிறைய ரசிகர்கள் உண்டு. ஆனால் என்னை வேண்டுமென்றே சூழ்ச்சிகள் செய்து ட்ரோல் செய்கிறார்கள்.. மதுரையில் இருந்து விஜயகாந்த் சினிமாவுக்கு வந்து சாதித்தார் ஆனால் அவருக்கு பின் அந்த இடத்தை பிடிப்பேன்.. அவரைப் போலவே நடிகர் சங்கத் தலைவராகவும் மாறுவேன்’ என கூறியிருக்கிறார்..

மேலும் ‘திரிஷாவை போல ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.. எனக்கு வயது குறைவுதான்.. ஆனால் வயதாக வயதானவர் என்பது போலவும், எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது போலவும் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள்’ என்றும் அவர் கூறியிருக்கிறார்..