தொடர்புடைய செய்திகள்
- ஆறு மாதம் கழித்து விலை குறைந்த சிலிண்டர்! மக்கள் நிம்மதி பெருமூச்சு!
- கவர்மெண்ட் பஸ்ல போனவங்களுக்கு ஸ்வீட்!! ஆச்சரியப்படுத்தும் போக்குவரத்து ஊழியர்கள்!!
- ரியல்மி Extra Days: ஸ்மார்ட்போன்(ஸ்) மீது எதிர்பாரா விலை குறைப்பு!!
- கேஷுவல் விசிட்டா? கேஷ் குறைப்பு விசிட்டா? – ட்ரம்ப்பின் இந்திய பயணம்!
- முடிவுக்கு வந்த ஓசி பயணம்; கட்டணம் வசூலிக்க ரெடியான சுங்கச்சாவடி!!
பேருந்து கட்டணம் திடீர் குறைப்பு: பயணிகள் மகிழ்ச்சி
பேருந்து கட்டணம் அவ்வப்போது அதிகரித்துக் கொண்டேதான் வரும் என்பதும் குறைத்ததாக இதுவரை வரலாறு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த அரசு போக்குவரத்து கழகங்களில் மட்டும் தற்போது பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இந்த பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ஐந்து ரூபாய் முதல் 15 ரூபாய் வரை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய தூரம் செல்லும் 2 ப்ளஸ் 2 இருக்கை கொண்ட சொகுசுப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 25ல் இருந்து 15 ரூபாயாகவும், 3 ப்ளஸ் 2 இருக்கை கொண்ட பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணம் 15 ல் இருந்து 10 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது
இன்று முதல் இந்த குறைந்த கட்டணம் அமலுக்கு வருவதாகவும் பயணிகளை கவரும் வகையில் இந்த கட்டணக் குறைப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் விழுப்புரம் கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
