வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2020 (12:28 IST)

முடிவுக்கு வந்த ஓசி பயணம்; கட்டணம் வசூலிக்க ரெடியான சுங்கச்சாவடி!!

செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் என்ற பகுதியில் உள்ள சுங்கச் சாவடி விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் என்ற பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் திருச்சிக்கு சென்ற பேருந்து ஒன்றின் ஓட்டுநருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே கட்டணம் செலுத்துவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.   
 
இந்த பிரச்சனையை வாக்குவாதத்தில் முடிந்து அதன் பின்னர் கைலகப்பு ஆனதால் சுங்கச்சாவடியை மக்கள் அடித்து நொருக்கினர். இதனால் சம்பவம் நடந்த ஜனவரி 26 ஆம் தேதி முதல் இப்போது வரை கிட்டதட்ட ஒரு மாத காலம் இந்த சுங்கச்சாவடி செயல்படாமல் இருக்க  இலவசமாக வாகனங்கள் சென்று வருகிறது. 
 
இந்நிலையில், செங்கல்பட்டு சுங்கச்சாவடியை மீண்டும் திறக்க தேசிய நெடுஞ்சாலை துறை இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது. எனவே வருகிற 25 ஆம் தேதி சுங்கச்சாவடி மீண்டும் திறக்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது.