1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vilathikulam culprit confession about the murder

கஞ்சா போதையில் வெறி தலைக்கேறி!.. விளாத்திக்குளம் கொலையாளி பகீர் வாக்குமூலம்!..

vilathikulam
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் என்கிற கிராமத்தில் உள்ள ஒரு காட்டு பகுதியில் சில நாட்களுக்கு முன்பு 12ம் வகுப்பு படிக்கும் ஒரு பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிசிடிவி கேமரா பதிவை அடிப்படையாக வைத்து தர்ம முனிஸ்வரன் என்பது என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் அந்த சிறுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சில வருடங்களுக்கு முன்பு 65 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த வழக்கில் சிறையில் இருந்த தர்ம முனிஸ்வரன் சமீபத்தில் ஜாமீன் வாங்கி வெளியே வந்திருக்கிறார்.

அதன்பின்னர் இந்த படுகொலையை செய்திருக்கிறார். இந்நிலையில், சிறுமியை கொலை செய்தது எப்படி என சம்பவம் நடந்த இடத்தில் தர்ம முனீஸ்வரன் போலீசாரிடம் நடித்துக் காட்டியிருக்கிறார்.  பெண்கள் யாரேனும் வருகிறார்களா என காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்தேன். அப்போது அந்த சிறுமி வந்தார்.. அவர் நெற்றியில் கட்டையால் ஓங்கி அடித்தேன்.. அதில் அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடலில் நகை இல்லை. அதன்பின் கஞ்சாவை புகைத்தேன். கஞ்சா வெறி தலைக்கு ஏறியதால் சிறுமியை பாலியல் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்தேன். அப்போது அந்தப் பெண்ணை தேடி அவரின் பெற்றோர்கள் வந்தார்கள்.. அவர் சத்தம் போட்டு கத்தக் கூடாது என்பதற்காக வாயை அழுத்திக் கொண்டேன்..

அதன்பின் கழுத்திலும், வாயிலும் காலால் மிதித்து சிறுமியை கொலை செய்தேன். அதன் பின்னரும் என் வெறி அடங்காததால் மீண்டும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தேன்’ என பகிர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் தர்ம முனீஸ்வரனை பாளையங்கோட்டை சிறையிலிருந்து மதுரை சிறைக்கு போலீசார் மாற்றியிருக்கிறார்கள்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
முடியல!.. ஈரான் போரை முடிச்சிக்கலாம்!.. இறங்கிவந்த டொனால்ட் டிரம்ப்!.