அரசு பேருந்து மோதி 4 பேர் பலி!.. சேலம் அருகே அதிர்ச்சி...
சேலம் மாவட்டம் அரியலூர் பகுதியில் அரசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவையில் இருந்து சேலம் ஒரு அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அரியலூர் பகுதி அருகே பேருந்து வந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையின் மறுபக்கம் சென்று அந்த வழியாக சென்று கொண்டிருந்த பைக் மற்றும் டெம்போ ஆகியவற்றின் மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் பைக்கில் சென்ற இரண்டு பேர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.