1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. culprist arrested related vilathikulam school student

விளாத்திக்குளம் பள்ளி மாணவி கொலை!.. சிசிடிவி கேமராமா மூலம் சிக்கிய குற்றவாளி

vilathikulam
கடந்த 11ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் என்கிற கிராமத்தின் காட்டுப் பகுதியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமையாக கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.. எனவே குற்றவாளியை பிடிக்க 10 தனி படைகள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில்தான் இந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் வசிக்கும் தர்ம முனிஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.. காட்டுப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவின் மூலம் தர்ம முனிஸ்வரன் சிக்கியிருக்கிறார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு அவர் அந்த பக்கம் பைக்கில் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. மேலும் அவர் ஓட்டி சென்ற பைக்கும் திருடு போனதாக சொல்லப்பட்டிருக்கிறது..

கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் 2020ம் வருடம் எட்டயபுரத்தில் 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். சமீபத்தில்தான் ஜாமினில் வெளியே வந்திருக்கிறார்.. காவல் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்காக வந்தபோதுதான் வரும் வழியில் மாணவியை அவர் கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நான் கூட்டணிக்கு போனா 8 பேர் கூட ஓட்டு போட மாட்டாங்க!.. சீமான் ஓப்பன்...