1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. premalatha going to contest in the election

திமுகவுடன் கூட்டணி!.. கட்சியினர் விருப்பம்!. தேர்தலில் போட்டியிடுவேன்!.. பிரேமலதா பேட்டி!...

premalatha
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது தேமுதிக. விஜயகாந்த் கட்சி தொடங்கி 20 வருடங்கள் முடிந்து விட்டது.. ஆனால் ஒரு முறை கூட திமுகவுடன் அவர் கூட்டணி அமைக்கவில்லை.. 2016ம் வருடம் திமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி அமைக்கும் முடிவில் இருந்தார். ஆனால் அது நடக்கவில்லை.

இந்நிலையில்தான், இன்று காலை அறிவலாயத்திற்கு வந்த பிரேமலதா திமுக கூட்டணியை உறுதி செய்திருக்கிறார். அதன்பின்  தேமுதிக தலைமை அலுவலகம் அமைந்துள்ள கோயம்பேட்டிற்கு வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கடந்த பல நாட்களாகவே யாருடன் கூட்டணி அமைப்பீர்கள்? என நீங்கள் தொடர்ந்து என்னை கேட்டு வந்தீர்கள்.. நேரம் வரும்போது உங்களை அழைத்துதான் அறிவிப்பேன் என சொன்னேன். அதுபோலவே இப்போது அறிவித்திருக்கிறேன். திமுகவுடன் நாங்கள் கூட்டணி அமைத்திருக்கிறோம். இது கட்சியினரின் முடிவு.. அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து பேசி இந்த முடிவை எடுத்திருக்கிறேன்..

நான் எந்த நிர்வாகியிடம் பேசினாலும் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சொன்னார்கள். தேமுதிக நிர்வாகிகளின் விருப்பமே  எங்கள் விருப்பம்.. அவர்களின் முடிவே எங்கள் முடிவு.. தற்போது கேப்டனும் இல்லை.. கலைஞரும் இல்லை.. அவர்கள் ஆசியோடு இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

எங்களுக்கு திருமணம் நடத்தி வைத்ததே கலைஞர் கருணாநிதிதான். எங்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் அறிவாலயத்தில்தான் நடந்தது. எனவே திமுகவுடன் எங்களுக்கு நெருங்கிய உறவு உண்டு.. ஆனால் பலமுறை கூட்டணி பற்றி பேசியும் அது நிறைவேறவில்லை.. இப்போது அது நடந்திருக்கிறது. 10 வருடங்கள் கழித்து தேன் கலந்த பாலில் பழம் விழுந்திருக்கிறது. இது எல்லோரும் விரும்பும் கூட்டணி.. நானும் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருக்கிறேன்.. தேமுதிகவுக்கு எவ்வளவு தொகுதிகள் என்பதை அண்ணன் ஸ்டாலின் அறிவிப்பார்’ என கூறினார்.
அடுத்த கட்டுரையில்
குடும்பத்தில் 2 எம்.எல்.ஏ!. ஒரு எம்.பி!.. பக்கா ஸ்கெட்ச் போட்டு திமுக கூட்டணிக்கு போன பிரேமலதா!..