குடும்பத்தில் 2 எம்.எல்.ஏ!. ஒரு எம்.பி!.. பக்கா ஸ்கெட்ச் போட்டு திமுக கூட்டணிக்கு போன பிரேமலதா!..
நடிகர் விஜயகாந்த் தேமுதிக கட்சியை துவங்கிய போது அவருக்கு மக்களிடம் பெரிய வரவேற்பு இருந்தது.. அதே நேரம் கட்சி தொடர்பான முக்கிய முடிவுகளை அவரின் மனைவி பிரேமலதா எடுத்ததாக அப்போதே சொல்லப்பட்டது. கலைஞர் கருணாநிதி. ஜெயலலிதா இருவருக்கும் எதிராக அரசியல் செய்வதே விஜயகாந்தின் விருப்பமாக இருந்தது.. ஆனால் அது நமக்கு பெரிய லாபம் இல்லை.. ஏதோ ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே நமக்கு அதிகாரம் கிடைக்கும் என பிரேமலதா சொன்னதால்தான் 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர்ந்தார் விஜயகாந்த்.
ஆனால் சட்டசபையில் கோபப்பட்டு அதிமுகவின் கோபத்தை சம்பாதித்தார் விஜயகாந்த். ஆனா அதற்கெல்லாம் அவர் கவலைப்படவில்லை.. 2016ம் வருடம் தேமுதிக எப்படியாவது திமுக கூட்டணியில் கொண்டுவர கலைஞர் கருணாநிதி விரும்பினார். ஆனால் விஜயகாந்த், வைகோ, திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியோர் இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்கிற தலைப்பில் ஒரு கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்கள் அது ஒன்றும் மக்களிடம் எடுபடவில்லை. மேலும், விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்..
கடந்த 10 வருடங்களாகவே அதாவது கடந்த இரண்டு சட்டசபை தேர்தலிலும் தேமுதிகவுக்கு ஒரு எம்எல்ஏ கூட கிடைக்கவில்லை. 2021 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இணைந்து தேமுதிக தேர்தலை சந்தித்த போது தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக அதிமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் அதை செய்யவில்லை. இந்த கோபம் பிரேமலதாவுக்கு இருந்தது. தனது சகோதரர் சுதீஷுக்கு எம்.பி. பதவி கிடைக்க வேண்டும் என ஆசைப்படும் பிரேமலதா 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில் தங்களுக்கு 20 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்தார்,,
ஆனால் இது அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே இதை ஏற்கவில்லை. அதன்பின் இறங்கி வந்த பிரேமலதா 10 தொகுதிகளை கேட்டதாக தெரிகிறது.. ஆனால் அதையும் அதிமுக ஏற்கவில்லை
. அனேகமாக திமுகவில் 7 முதல் 10 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா கொடுப்பது உறுதி என்கிறார்கள். அதனால்தான் திமுகவுடன் கூட்டணி என முடிவு செய்துவிட்டார் பிரேமலதா..
கண்டிப்பாக தனது மகன் விஜய பிரபாகரனை எம்.எல்.ஏ.வாக பார்க்கும் ஆசை பிரேமலதாவுக்கு உண்டு. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விஜயபிரபாகரன் அதிக வாக்குகளை பெற்ற விருதுநகர் தொகுதியில் மகனை போட்டியிட வைப்பார்.. கண்டிப்பாக அவரின் வெற்றிக்கு திமுக உதவும்.. கண்டிப்பாக விஜய் பிரபாகரன் எம்எல்ஏவாக மாறுவார்..
அதேபோல விஜயகாந்த் முதலில் முதன் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரிஷிவந்தியம் தொகுதியில் செண்டிமெண்டாக பிரேமலதா போட்டியிடவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.. அல்லது வேறு தொகுதியிலும் அவர் போட்டியிடலாம்.. ஒருபக்கம் சுதீஷுக்கு எம்பி பதவி உறுதி.. எனவே குடும்பத்தில் இரண்டு எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒரு எம்.பி என திட்டமிட்டிருக்கிறார் பிரேமலதா என்கிறார்கள்.