1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk nirmal kumar talk about dmdk decision

இது சந்தர்ப்பவாத கூட்டணி.. விஜயகாந்த் இதை செய்யவே மாட்டார்!... தவெக கருத்து!...

dmdk
தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என்பது தெரியாமல் இருந்த நிலையில் இன்று காலை அறிவாலயத்திற்கு வந்த பிரேமலதா திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதன்பின் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மேலும் எவ்வளவு தொகுதி பங்கீடு என்பது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் எனவும் அவர் கூறியிருக்கிறார். அதோடு திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் விரும்பினார்கள். அவர்கள் விருப்பத்தை ஏற்று திமுக கூட்டணியில் இணைந்திருப்பதாக பிரேமலதா கூறினார்.. இந்நிலையில், பிரேமலதாவின் இந்த முடிவை தவெக கடுமையாக விமர்சித்திருக்கிறது.

இந்நிலையில், இதுபற்றி கற்றுத் தெரிவித்த தவெக துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ‘இது முழுக்க முழுக்க சந்தர்ப்பவாத கூட்டணி.. பொருந்தா கூட்டணி என்ன சொல்பவர்களே அப்படித்தான் இது. ஒருவர் கூட இதை நல்ல கூட்டணி என சொல்லமாட்டார்க்ள். விஜயகாந்த் கட்சி துவங்கியதில் இருந்து திமுகவை கடுமையாக விமர்சித்தார்.. அவர் அரசியலில் இருந்தவரை திமுக பக்கம் போகவில்லை.

அவரின் கருத்துக்கு மாறாக பிரேமலதா திமுகவில் கூட்டணி அமைத்திருக்கிறார்.. விஜயகாந்த் இதை ஒருபோதும் செய்ய மாட்டார். விஜயகாந்தை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியது திமுகதான்.. அவரின் அரசியல் வாழ்க்கை முடித்ததே திமுகதான்.. அப்படி இருந்தும் பிரேமலதா திமுக சென்றிருக்கிறார் என்றால் இது முழுக்க முழுக்க பேர அரசியல். லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் பிரேமலதா அந்த முடிவை எடுத்திருக்கிறார்.. தேமுதிகவும் எந்த கொள்கையும் இல்லை’ என விமர்சித்திருக்கிறார்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
சீமான் டைம் பாஸுக்காக கட்சி நடத்துகிறார்.. தவெக நக்கல்!...