தொடர்புடைய செய்திகள்
- விஜயகாந்துக்கு என்ன ஆச்சு? - மருத்துவமனை அப்டேட்
- வேதனையாக இருக்கிறது : விஜயகாந்தின் மகன் வெளியிட்ட வீடியோ
- விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி: வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக அறிவிப்பு
- பெண்ணுக்கு தையல் போட்ட பிணவறை ஊழியர் : அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி
- 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: பரபரப்பான சூழ்நிலையில் இன்று இறுதி வாதம்
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த், கருணாநிதியின் மறைவிற்கு பின் திரும்பி வந்தார். விமான நிலையத்திலிருந்து நேரடியாக கருணாநிதியின் சமாதிக்கு சென்ற அவர் நடக்க முடியாமல், சுற்றி நடப்பதை உணரமுடியாமல் நின்ற விதம் அந்த வீடியோவை பார்த்த பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில்தான், நேற்று முன் தினம் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சர்க்கரை, தொண்டையில் செய்த அறுவை சிகிச்சை, தைராய்டு ஆகிய பிரச்சனைகளுக்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. அவர் நன்றாக இருக்கிறார். உடல் நலம் பெற்று விரைவில் திரும்புவார் என தேமுதிக தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. பின் அவர் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் அவருக்கு சிகிச்சை நிறைவடைந்ததால், விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனால் தேமுதிக தொண்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
