1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 1 செப்டம்பர் 2018 (13:07 IST)

வேதனையாக இருக்கிறது : விஜயகாந்தின் மகன் வெளியிட்ட வீடியோ

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை தொடர்பாக அவரின் மகன் விஜய் பிரபாகர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் வெளியாகி வருகிறது.
 
தேமுதிக தரப்பில் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை  வெளியிடப்பட்டது. அதில் 'தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜயகாந்தின் மூத்த மகன் விஜய் பிரபாகர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
 
அதில் “என் தந்தை உடல்நிலை குறித்து தேவையற்ற வதந்தி பரவி வருகிறது. அவர் நன்றாக இருக்கிறார். தேவையில்லாத தகவல்களை பரப்பி விடுவதால் உங்களுக்கு என்ன நன்மை? உங்கள் வீட்டில் இப்படி ஒருவர் மருத்துவமனைக்கு சென்றால் இப்படித்தான் பேசுவீர்களா? இதனால் நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். 
 
அவருக்கு ஒன்றும் ஆகாது. தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். எல்லோருக்கும் வேலை, குடும்பம் இருக்கிறது. அதை பாருங்கள்.  அவர் ஆயிரம் மடங்கு நலமுடன் திரும்பி வருவார். பாசிட்டிவாக யோசியுங்கள். அவரை நினைத்து பெருமைபடுஞ்கள் என அவர் உருக்கமாக அந்த வீடியோவில் பேசியுள்ளார்.