தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் என்னை பழைய மிரட்டலுடன் காணப்போகிறீர்கள்: பார்த்திபனிடம் விஜயகாந்த்
- விஜயகாந்த் தனது முடிவை மாற்ற கூடாது: ஓபிஎஸ்
- இந்த தடவை யார் கூடயும் கூட்டணி இல்லை - கெத்து காட்டும் விஜயகாந்த்
- கேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் : விஜயகாந்த் அறிவிப்பு
- நடக்க முடியாமல்.... சுற்றி நடப்பதை உணர முடியாமல்.. என்ன ஆச்சு விஜயகாந்துக்கு?
விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி: வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக அறிவிப்பு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சற்றுமுன்னர் போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் தேமுதிக சற்றுமுன் இதுகுறித்து விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தேமுதிக தொண்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் டயாலிசிஸ் சிகிச்சைக்காக போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.
அடுத்த கட்டுரையில்
