வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (09:34 IST)

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: பரபரப்பான சூழ்நிலையில் இன்று இறுதி வாதம்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று நடைபெறுகிறது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது. ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் அவர்களிடம் சென்றது. 
 
சத்தியநாராயணன் தலைமையில் இந்த வழக்கின் விசாரணை பல்வேறு கட்டங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு சம்மந்தமான அனைத்து வாதங்களும் இன்று நிறைவடையும் எனத் தெரிகிறது. ஆகவே 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் இறுதித் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.