சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன் நான்! – விஜய் சேதுபதி ஓபன் டாக்!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (15:11 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த நடிகர் விஜய் சேதிபதி தான் சாதி, மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டவன் என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இரவு 7 மணி வரை தேர்தல் நடக்க உள்ள நிலையில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் எந்திர கோளாறு உள்ளிட்டவற்றால் வாக்குப்பதிவு தாமதமாகியும் வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் அரசியம் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். நடிகர் அஜித், விஜய், விக்ரம் உள்ளிட்டோர் வாக்களித்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி கோடம்பாக்கம் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ”சாதி மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டவன் நான். மனிதர்கள்தான் முக்கியம் என நினைப்பவன்” என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :