சொந்த ஊரில் வாக்களித்த திருமா வளவன்!

Last Updated: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (13:44 IST)

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் அரியலூர் மாவட்டம் அங்கனூரில் வாக்களித்துள்ளார்.

தமிழகத்தில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் நடந்து வருகிறது.
அரசியல் தலைவர்கள் எல்லோரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த அங்கனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ’திமுக கூட்டணி அறுதிப் பெரும்பாண்மையோடு வெற்றி பெறும் எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :