காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!
ஹரியானா மாநிலம் பகதூர்கட்டில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு பிறகு நடந்த ஒரு கொடூர கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குருகிராமில் சிஏவாக பணியாற்றும் அன்ஷுல் தவான், எச்டிஎப்சி வங்கியில் பணியாற்றும் தன் மனைவி மஹக்கை, காதலர் தினத்தை ஒன்றாக கொண்டாடிவிட்டு அன்றிரவே படுகொலை செய்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில், மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியின் போது தன் மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டதாக அன்ஷுல் நாடகமாடினார். ஆனால், ஜாஜ்ஜர் காவல்துறையினர் நடத்திய 18 மணி நேர தீவிர விசாரணையில் உண்மை வெளிவந்தது.
தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட அன்ஷுல், திட்டமிட்டு கையுறைகளை அணிந்து முதலில் மஹக்கை நெரித்து கொன்று, பின் கத்தரிக்கோலால் அவர் கழுத்தை அறுத்துள்ளார். கைரேகைகள் சிக்காமல் இருக்க அவர் செய்த தந்திரங்கள் எடுபடவில்லை.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணமான இந்த தம்பதியின் வாழ்க்கை, ஐந்தே மாதங்களில் சந்தேகத்தால் முடிவுக்கு வந்துள்ளது. அன்ஷுலை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
Edited by Siva