1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (13:46 IST)

எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் பாஜகவிற்கு விழும் ஓட்டு - விருதுநகரில் சலசலப்பு!

விருதுநகர் சத்ரியா பள்ளி வாக்குச்சாவடியில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் பாஜக சின்னம் பதிவாவதாக வாக்களர்கள் புகார். 

 
இந்தியாவில் உள்ள அனைத்து தேர்தலும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம்தான் நடைபெற்று வருகிறது என்பதும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் அவ்வப்போது தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே. 
 
ஏற்கனவே நடைபெற்ற தேர்தலில் ஒரு கட்சியின் சின்னத்துக்கு வாக்கு அளித்தால் இன்னொரு கட்சியின் சின்னத்தில் விளக்கு எரிவதாகவும் அந்த கட்சிக்கு அந்த வாக்கு பதிவு செய்யப்படுவதாகவும் புகார்கள் கூறப்பட்டன. ஆனால் இந்த புகார் குறித்து தேர்தல் ஆணையம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இது அர்த்தமில்லாத புகார் என்றும் கூறியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், விருதுநகர் சத்ரியா பள்ளி வாக்குச்சாவடியில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் பாஜக சின்னம் பதிவாவதாக வாக்களர்கள் புகார் அளித்துள்ளனர். புகாரையடுத்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு வாக்கு இயந்திரத்தை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.