செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (14:15 IST)

திமுக வேட்பாளர் கார் மீது அதிமுக, பாஜகவினர் தாக்குதல்! – கோவையில் பரபரப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் தொண்டாமுத்தூரில் திமுக வேட்பாளர் காரை அதிமுக, பாஜகவினர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக தொடங்கி இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி சென்ற கார் மீது அதிமுக, பாஜக தொண்டர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை கேட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரியும் தெரிவித்துள்ளார். இந்த கலவர சம்பவத்தால் தொண்டாமுத்தூர் பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.