கோவையில் டோக்கன் அளித்து பணப்பட்டுவாடா… கமல்ஹாசன் புகார்!

Last Updated: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (13:45 IST)

கோவையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக கமல்ஹாசன் புகாரளித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் வாக்களித்த பின்னர் தான் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதிக்கு சென்று வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ஓட்டுச்சாவடிகளில் நல்ல கூட்டம் உள்ளது. வெளியில் டோக்கன் கொடுத்து பொருட்களாக வாங்கிக் கொள்ள சொல்லி பணப்பட்டுவாடா நடக்கிறது. டோக்கன் நகல் என்னிடம் உள்ளது. பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிப்பேன்.
‘ எனக் கூறியுள்ளர்.இதில் மேலும் படிக்கவும் :