வியாழன், 22 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 மே 2024 (11:03 IST)

மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை.. விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

மாணவ,  மாணவிகளுக்கு ஊக்கத்தொகை.. விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!
கடந்த ஆண்டு நடிகர் விஜய் 10,12ஆம் வகுப்பு வகுப்பில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் என்பதும் இந்த விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது என்பது தெரிந்தது. 
 
அதேபோல இந்த ஆண்டு மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு ஜூன் 4-ம் தேதிக்கு பின் நடத்த  திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த முறை எந்த விதமான குழப்பமும் இன்றி சரியான மாணவ மாணவிகளை தேர்வு செய்ய வேண்டும் என்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் நடைபெற உள்ளதை அடுத்து அதற்கு முன்பே இந்த விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மொத்தம் 1500 மாணவ மாணவிகளுக்கு தலா ரூபாய் 5000 ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது. இதற்கு 75 லட்சம் ரூபாய் செலவாகும் என்ற நிலையில் மேலும் சாப்பாடு உள்ளிட்ட செலவுகளுக்கு 25 லட்சம் என மொத்தம் ஒரு கோடி ரூபாய் இந்த விழாவுக்கு பட்ஜெட் போடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. 
 
கடந்த முறை போலவே இந்த முறையும் 1500 மாணவ மாணவிகளுக்கும் தன்னுடைய கையால் ஊக்கத்தொகை வழங்க இருப்பதாகவும்  ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று அவர் வழங்க இருப்பதை எடுத்து மாணவ மாணவிகள் வாக்குகளை முழுவதுமாக கவர அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran