வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (14:27 IST)

முதல்வருடன் செஸ் சாம்பியன் குகேஷ் சந்திப்பு..! ஊக்கத்தொகை வழங்கிய ஸ்டாலின்..!!

Stalin Gukesh
கேண்டிடேட் செஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சத்துக்கான காசோலை மற்றும் கேடயத்தை வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
 
கனடாவின் டொராண்டா நகரில் நடைபெற்ற கேண்டிடேட் செஸ் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். இதன் மூலம் நமது நாட்டிற்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்.
 
இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சத்துக்கான காசோலை மற்றும் கேடயத்தை முதல்வர் வழங்கினார். 

 
இந்த சந்திப்பின்போது, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறை அதிகாரிகள், குகேஷின் பெற்றோர் உடனிருந்தனர். ஏற்கெனவே இப்போட்டியில் பயிற்சி பெறுவதற்காக, தமிழக அரசின் சார்பில் 15 லட்சம் ரூபாய் குகேஷுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.