1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2024 (20:50 IST)

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை - முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

பொங்கலையொட்டி  போக்குவரத்து ஊழியர்களுக்கு  ஊக்கத்தொகை அறிவித்துள்ளது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு.

சமீபத்தில் தமிழக அரசுடன்  நடைபெற்ற  முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து, அதன்படி போராட்டம் தீவிரமடைந்த  நிலையில்,  நீதிமன்ற உத்தரவை அடுத்து, பொங்கல் பண்டிகையொட்டி இப்போராட்டத்தை வரும் ஜனவரி 19 ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளனர்.

இந்த நிலையில்,  பொங்கலையொட்டி  போக்குவரத்து ஊழியர்களுக்கு  ஊக்கத்தொகை அறிவித்துள்ளது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு.

அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை என்று தெரிவித்துள்ளது. அதில், 200 நாட்கள் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 ஊக்கத்தொகை வழங்கப்படும். 151 நாட்கள் முதல் 199 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ195 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும், 91 நாட்கள் முதல் 150  நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ரூ.85 வழங்க உத்தரவிட்டுள்ளது.