செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 4 மே 2024 (11:06 IST)

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு.. மாணவ, மாணவிகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?

NEET
நாளை நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவர்களும், நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்களும் நாளை நடைபெறும்  நீட் தேர்வில் பங்கேற்கின்றனர். நாளை பிற்பகல் 2 மணிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு தொடங்குகிறது.
 
முழுக்கை சட்டை அணியக்கூடாது, மாணவிகள் தலையில் பூ வைக்கக்கூடாது, தங்க நகை ஆபரணங்கள் அணிந்திருக்கக் கூடாது. மொபைல் போன் எடுத்து செல்லத்தடை, தெளிவாக தெரியும் வகையில் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லலாம்.
 
எலெக்ட்ரானிக் சாதனங்கள் எதையும் எடுத்து செல்ல முடியாது. காலணி அணியவும் தடை என மாணவ மாணவிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
 
https://neet.ntaonline.in/frontend/web/admitcard/index என்ற இணையதளத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளவும்  என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது
 
Edited by Mahendran