வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (12:44 IST)

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.250 கோடி ஒதுக்கீடு..! வேளாண் பஜ்ஜெட்டில் அறிவிப்பு..

panner selvam
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 
 
2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
 
குறிப்பாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.215 வழங்கப்படும் எனவும் சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை மேம்படுத்த ரூ.12.51 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார். 
 
மேலும் பயிர் உற்பத்தி திறனை உயர்த்த ரூ.48 கோடி மதிப்பில் ஊக்குவிப்பு திட்டம் செயல்படுத்தப்படும், முக்கிய பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள் பரப்பை விரிவாக்கம் செய்ய ரூ.108 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  விவசாயிகள் வருவாய் இழப்பிலிருந்து மீண்டு வர பயிர்க் காப்பீடு திட்டம் ரூ.1,775 கோடியில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள்:

கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்  தெரிவித்தார்.