1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold and Silver Prices in Chennai: Significant Drop Recorded Today

தங்கம், வெள்ளி இன்று அதிரடியாக விலை குறைவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

Gold Price Chennai
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று அதிரடியான சரிவு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று  கணிசமாக குறைந்து நகை வாங்குவோருக்கு நிம்மதியை அளித்துள்ளது.
 
இன்றைய நிலவரப்படி, 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூ.16,254 ஆகவும், 8 கிராம் ரூ.1,30,032 ஆகவும் உள்ளது. நேற்றுடன் ஒப்பிடுகையில் சவரனுக்கு ரூ.616 குறைந்துள்ளது. 
அதேபோல், ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,900-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 
வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.290 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,90,000 ஆகவும் விற்பனையாகிறது. கடந்த மார்ச் 11 அன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.3,00,000 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.10,000 வரை சரிந்துள்ளதை காண முடிகிறது. 
 
சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் முதலீட்டு சூழல்களால் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
அமெரிக்காவில் இந்திய சகோதரர்களுக்கு 400 ஆண்டுகள் சிறைதண்டனை.. என்ன குற்றம் செய்தனர்?