1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vijay in erode, annamalai in tirupur

ஈரோட்டில் விஜய்.. திருப்பூரில் அண்ணாமலை.. திமுக அரசுக்கு இரட்டை நெருக்கடியா?

annamalai
ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் ஆற்றிய உரையில் திமுக-வை "தீய சக்தி" என்று நேரடியாக சாடியது, அந்த பெயரால் திமுக-வை நீண்டகாலமாக விமர்சித்து வந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் பாணியை நினைவுபடுத்தியது.  இதற்கு மாற்றாக தனது தமிழக வெற்றிக் கழகத்தை "தூய சக்தி" என்று அவர் அடையாளப்படுத்தியுள்ளார். 
 
இந்நிலையில் நீண்ட நாட்களாக பதுங்கியிருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இப்போது மீண்டும் களத்தில் அதிரடியாக குதித்துள்ளார். திருப்பூரில் குப்பைகளை குடியிருப்பு பகுதிகளில் கொட்டுவதற்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
"மக்களைக் கைது செய்ய வருபவர்களை நான் பார்த்து கொள்கிறேன்; நாளையிலிருந்து ஒவ்வொரு நாளும் புதுசு புதுசாக போராட்டங்களை செய்வோம்" என்று அவர் விடுத்த எச்சரிக்கை, பாஜக தொண்டர்களிடையே பெரும் வீரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
கஞ்சா மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையில், மக்களுக்காக அறவழியில் போராடுபவர்களை கைது செய்வது ஏன் என்று அவர் எழுப்பிய கேள்வி ஆளுங்கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஒரு பக்கம் விஜய்யின் ஈரோட்டு முழக்கமும், இன்னொருபுறம் அண்ணாமலையின் திருப்பூர் கள போராட்டமும் திமுக-விற்கு இரட்டை சவாலாக உருவெடுத்துள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
களத்தில் அவர்தான் இல்லை.. விஜய் அவரையே சொல்லி கொள்கிறார் என நினைக்கிறேன்: தமிழிசை