ஜெயலலிதா பாணியிலான மேடை பேச்சு.. தொண்டருக்கு விஜய்யின் அன்புக்கட்டளை..!
நேற்று நடந்த ஈரோடு தவெக மாநாட்டில் விஜய்யின் பேச்சு முறை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாணியை நினைவுபடுத்தியது. "செய்வீர்களா? சொன்னார்களே செய்தார்களா?" என்பது போன்ற கேள்விகளை கேட்டுவிட்டு, மக்கள் பதிலளிப்பதற்காக சிறிது இடைவெளி விட்டுப் பேசுவது ஆடியன்ஸை நேரடியாகக் கனெக்ட் செய்தது.
ஈரோடு மண்ணின் மைந்தர்களான காளிங்கராயர் மற்றும் தந்தை பெரியார் ஆகியோரை போற்றிப் பேசிய அவர், சமூக நீதி மற்றும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காகப் பெரியார் போட்ட விதைகளைத் தானும் சுமந்து செல்வதாகப் பெருமிதத்துடன் கூறினார்.
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் போன்ற அசம்பாவிதங்கள் ஈரோட்டில் நடக்காதவாறு தவெக-வின் சொந்த பாதுகாப்பு படையும் காவல்துறை அதிகாரிகளும் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டனர். கூட்டத்தின் போது மின் கம்பத்தில் ஏறி முத்தம் கொடுத்த ரசிகரைப் பார்த்து, "தம்பி நீ கீழே இறங்கினால் தான் நான் பேசுவேன்" என்று விஜய் அன்பு கட்டளையிட்டு இறக்கியது, கூட்டத்தை கையாளுவதில் அவருக்கு ஏற்பட்டுள்ள முதிர்ச்சியை காட்டியது. இது காவல்துறைக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் ஒரு பெரிய நிம்மதியை தந்துள்ளது.
Edited by Siva