புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 25 மார்ச் 2019 (10:38 IST)

ஸ்டாலினுக்கு விக்னேஷ் சிவன் போட்ட ஒத்த டுவீட்: திமுகவிலிருந்து தூக்கி வீசப்பட்ட ராதாரவி

காதலி நயன்தாரா பற்றி அவதூறாக பேசிய ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விக்னேஷ் சிவன் ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
 
நடிகர் ராதாரவி நடிகை நயன்தாராவை தரக்குறைவாக விமர்சித்து பேசியதற்கு திரையுலகினர் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக நயன்தாராவின் காதலனான விக்னேஷ் சிவன், ராதாரவியை கடுமையாக விமர்சித்து டிவிட்டரில் கண்டனங்களை பதிவிட்டு வந்தார். 
 
பொள்ளாச்சி விவகாரத்திற்கு குரல்கொடுத்த ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஒரு பெண்ணை இழிவாக பேசிய ராதாரவி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிவிட்டரில் அவர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
 
இதையடுத்து நேற்று ராதாரவி திமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதேபோல் ஸ்டாலின் ராதாரவிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். ராதாரவி தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது எனவும் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனவும் இன்று காலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.