ஐ ஏம் வெரி சாரி!!! சர்ச்சைப்பேச்சு: சரண்டர் ஆன ராதாரவி

radha
Last Modified திங்கள், 25 மார்ச் 2019 (08:38 IST)
நயன்தாரா குறித்து பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது எனவும் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
 
நடிகர் ராதாரவி நடிகை நயன்தாராவை தரக்குறைவாக விமர்சித்து பேசியதற்கு திரையுலகினர் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். விக்னேஷ் சிவன், சின்மயி உள்ளிட்ட பலர் பெண் என்றும் பாராமல் மிக மோசமான இந்த விமர்சனத்தை செய்த ராதாரவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதனால் திமுகவிலிருந்து ராதாரவி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது எனவும், அதற்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மனம் புண்பட்டிருந்தால் நான் அவர்களிடம் நேரடியாக சென்று மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ராதாரவி வருத்தம் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :