1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 25 மார்ச் 2019 (10:12 IST)

ராதாவா எடுத்துட்டு `ரவி’ன்னு வச்சிக்கோங்க - ராதாரவிக்கு விஷால் கண்டனம்

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்'. படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.



விழாவில் . நயன்தாரா, சக்ரி டோலட்டி ,யுவன் ஷங்கர் ராஜா எனப் படக்குழுவினர் யாருமே வரவில்லை. இருப்பினும் தயாரிப்பாளர்களுக்கு நெருக்கமான கரு.பழனியப்பன், நடிகர் ராதாரவி ஆகியோர் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் ராதாரவி, நயன்தாரா குறித்துப் பேசியது மிகவும் சர்ச்சையானது. இதற்கு திரை உலகினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
 
இந்நிலையில் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், `டியர் ராதாரவி சார், சமீபத்திய உங்களது  முட்டாள்தனமானப் பேச்சு, குறிப்பாகப் பெண்களுக்கு எதிராக இழிவான முறையில் பேசியதை வன்மையாகக் கண்டித்து, நடிகர் சங்கக் கடிதத்தில் கையெழுத்திடுவதில்  நடிகர் சங்க பொதுச் செயலாளராக மகிழ்ச்சியடைகிறேன்.  இந்தக் கடிதம் விரைவிலேயே வந்து சேரும். இப்போதிலிருந்து உங்க பேர `ரவி’ என்று வைத்துக்கொள்ளுங்கள் காரணம், உங்கள் பெயரில் ஒரு பெண்ணின் பெயரும் இருக்கிறது" எனப் பதிவிட்டிருக்கிறார்.