10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் சார்பில் மகளிர்களுக்கு தொழில் கடன் கொடுக்கப்பட்டு வருகிறது. அடுத்து வரும் 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவராக மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ள தமிழக அரசு தொழில் தொடங்க 25 சதவீதம் மானியத்துடன் அதிகபட்சம் 2 லட்சம் வரை வங்கி கடன் பெற்று பெற உதவுகிறது.
இதற்கான மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் விற்பனைக்கான ஆலோசனைகளையும் தமிழக அரசு வழங்கவுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற 18 முதல் 55 வரை உள்ள மகளிர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி எதுவும் தேவையில்லை. 10 லட்சம் வரை தேவை உள்ள வியாபாரம் மற்றும் உற்பத்தி தொழிலை தொடங்கலாம்.
அதிகபட்சமாக 2 லட்சம் வரை கடன் கிடைக்கும். இதில் பழங்குடியினர், பட்டியல் இனத்தவர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சம்பந்தப்பட்ட மகளிர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இந்த திட்டத்தின் கீழ் கடன் தொகை பெற தனியார் துறை வங்கிகள், சிறு நிதி வங்கிகள், தேசிய வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனம், தாய்கோ வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகலாம். வேளாண் சார்ந்த தொழில்கள், பண்ணை சார்ந்த தொழில்கள், கட்டிடம் கட்டுதல் தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத எந்த தொழிலும் செய்யலாம். உற்பத்தி பொருள்கள் தயாரிப்பது, குழந்தைகள் பராமரிப்பு நிலையம், வீட்டிலேயே உணவு தயாரித்து விற்பனை செய்தல், சலவை நிலையம், யோகா உடற்பயிற்சி நிலையம் அழகு, நிலையம் போன்ற தொழில்களும் தொழில்களை செய்யலாம்.
இதுபோக இன்னும் பல தொழில்களையும் தேர்ந்தெடுக்கலாம்.www.msmeonline.tn.gov.in/twees என்ற இணையதளம் முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம் இது பற்றி மேலும் தகவலுக்கு 8925533995, 8925533996, 8925533997 ஆகிய எங்களை தொடர்பு கொண்டு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.