ராதாரவிக்கு எந்த படங்களிலும் நடிக்க இனி வாய்ப்பில்லை: பிரபல நிறுவனம் அதிரடி
நடிகை நயன்தாராவை தரக்குறைவாக பேசிய நடிகர் ராதாரவிக்கு எங்களது நிறுவனத்தின் எந்த படங்களிலும் நடிக்க வாய்ப்பு அளிக்க மாட்டோம் என கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் அதிரடியாக அறிவித்துள்ளது.
பட விழா ஒன்றில் பேசிய நடிகர் ராதாரவி நடிகை நயன்தாராவை எம்ஜிஆர் சிவாஜி உடன் ஒப்பிடுகையில் மிக அசிங்கமாகவும் தரக்குறைவாக விமர்சித்து இருந்தார் இதற்கு திரையுலகினர் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள் . பெண் என்றும் பாராமல் மிக மோசமான இந்த விமர்சனத்தை செய்த ராதாரவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பலர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் நயன்தாரா குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்த ராதாரவி மீது தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் உள்ளிட்டவை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நிலையில் விசுவாசம் படத்தை வாங்கி வெளியிட இருந்த கே ஜி ஆர் ஸ்டுடியோஸ் தற்போது நயன்தாராவின் படத்தையும் வெளியிட உள்ளது. நிலையில் அந்த நிறுவனம் நடிகர் ராதாரவிக்கு தங்களது எந்த படங்களில் நடிக்க இனி வருங்காலத்தில் வாய்ப்பளித்த மாட்டோம் என்று அறிவித்துள்ளது. மேலும் ராதாரவியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அந்நிறுவனம், நடிகர் சங்கம் மற்றும் திரையுலகினர் யாரும் அவருக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதேபோல் திமுகவில் இருந்து வந்த ராதாரவி கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக திமுகவில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். வாய்விட்டதால் எல்லா பக்கத்திலிருந்தும் ரவுண்டுகட்டி அடிவாங்குகிறார் ராதாரவி என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.