புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 25 மார்ச் 2019 (08:56 IST)

ராதாரவிக்கு எதிராக களமிறங்கிய திமுக தலைவர்; டிவிட்டரில் அதிரடி

ராதாரவி பேசியது கடும் கண்டத்துக்கிரியது என திமுக தலைவர் ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.
 
நடிகர் ராதாரவி நடிகை நயன்தாராவை தரக்குறைவாக விமர்சித்து பேசியதற்கு திரையுலகினர் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். விக்னேஷ் சிவன், சின்மயி உள்ளிட்ட பலர் பெண் என்றும் பாராமல் மிக மோசமான இந்த விமர்சனத்தை செய்த ராதாரவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதனால் திமுகவிலிருந்து ராதாரவி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
 
தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது எனவும், அதற்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மனம் புண்பட்டிருந்தால் நான் அவர்களிடம் நேரடியாக சென்று மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என சற்றுமுன்னர் தெரிவித்தார்.
 
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.