புதன், 17 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 17 டிசம்பர் 2025 (17:59 IST)

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?
தமிழகம் முழுவதும் டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்ப்பது மிகவும் அவசியமாகும்.
 
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டிருந்தால், நீக்கப்பட்டதற்கான காரணத்தை அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். முகவரி மாற்றம், இறப்பு அல்லது இரட்டை பதிவு போன்ற காரணங்களால் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கலாம்.
 
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால், தகுதியுள்ள வாக்காளர்கள் படிவம் 6  மூலம் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
 
பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 19 முதல் 2026 ஜனவரி 18 வரை சமர்ப்பிக்கலாம்.
 
இந்த காலக்கட்டத்தில் பெறப்படும் தகுதியான விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் வெளியிடப்படவுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
எனவே, பொதுமக்கள் வரைவு பட்டியல் வெளியானவுடன் தங்களது விவரங்களை சரிபார்த்து, விடுபட்டிருந்தால் உடனடியாகப் பதிவு செய்வது அவசியமாகும்.
 
 
Edited by Mahendran