வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...
பொதுவாக உலகம் முழுவதும் அதிகமானோர் நாயை செல்லப்பிராணியாக வளர்ப்பார்கள். அதற்கு அடுத்த இடத்தை பூனை பிடிக்கிறது. சிலர் ஆடு, மாடு, கோழி, வாத்து உள்ளிட்ட பலவற்றையும் செல்லப்பிராணியாக வளர்க்கிறார்கள். வெளிநாடுகளில் ஓனான், தவளை, பாம்பு ஆகியவற்றை கூட சிலர் செல்லப்பிராணியாக வளர்ப்பதுண்டு.
அதேபோல் கிளியை கூட சிலர் வளர்க்கிறார்கள். கிளியிடம் உள்ள சிறப்பு என்னவெனில், அதற்கு சரியான பயிற்சி கொடுத்தால் அது மனிதர்கள் போலவே பேசும் திறன் கொண்டது. வெளிநாடுகளில் சில கிளிகள் மனிதர்களை போலவே அழகாக பேசும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளியாகி வைரலாவதுண்டு.
இந்நிலையில்தான் வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெங்களூரில் நடந்திருக்கிறது. பெங்களூரில் கிரிநகர் பகுதியில் வசித்து வசித்து வந்தவர் அருண்குமார். அவருக்கு வயது 34. இவர் கடந்த பல மாதங்களாகவே ஒரு கிளியை செல்லமாக வளர்த்து வந்திருக்கிறார்.
3 நாட்களுக்கு முன்பு அந்த கிளி அவரின் வீட்டின் அருகில் உள்ள மின்கம்பத்தின் மீது அமர்ந்திருக்கிறது. அவர் பலமுறை அழைத்தும் கிளி அவரிடம் செல்லவில்லை. மின்சாரம் தாக்கி அது இறந்துவிடும் என பயந்து அருண்குமார் ஒரு இரும்பு கம்பியை நீட்டி அதை காப்பாற்ற முயன்றிருக்கிறார். ஆனால் மின்கம்பியில் மின்சாரம் தாக்கி அது உடலில் பாய்ந்து அருண்குமார் இறந்து போனார். இந்த சம்பவம் நடந்து ஒரு மணி நேரமாகியும் கிளி மின் கம்பத்திலேயே இருந்திருக்கிறது.