பொங்கல் பரிசுத்தொகுப்பில் வேட்டி, சேலை உண்டா? தமிழக அரசு அறிவிப்பு
பொங்கல் பரிசு தொகுப்பில் வேட்டி சேலை வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என அதிமுக அதிகரித்திருந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் வேட்டி சேலை வழங்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இல்லை என்று அறிவிப்பு காரணமாக அதிமுக பாஜக போராட்டம் நடத்தியது. அதனடிப்படையில் கரும்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் வேட்டி சேலை வழங்கப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து அதிமுக கேள்வி எழுப்பியது. இந்த நிலையில் அமைச்சர் காந்தி செய்தியாளர்களை சந்தித்த போது பொங்கல் பரிசுத் தொகுப்பில் கண்டிப்பாக வேட்டி, சேலை இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து வழக்கம்போல் இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பில் வேட்டி சேலை உண்டு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Edited by Mahendran