1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Edappadi palanisamy says about sugar cane

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, அ.தி.மு.க. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: எடப்பாடி பழனிசாமி

Edappadi
பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டது அதிமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
தமிழக அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படவில்லை என அதிமுக இன்று போராட்டம் நடத்தியது என்பதும் இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இது அதிமுக போராட்டத்தை கிடைத்த வெற்றி என்றும் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இந்த நிலையில் கரும்பை வைத்து அரசியல் செய்து வந்த நிலையில் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
பிரதமர் மோடி தாயார் குணமடைய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!